×

கம்பம் தொகுதியில் 11 மனுக்கள் தள்ளுபடி

உத்தமபாளையம், மார்ச் 21: கம்பம் சட்டமன்ற தொகுதியில் 26 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 15 மனுக்கள் ஏற்பட்டு, 11 மனுக்கள் தள்ளுபடியாயின. கம்பம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் ராமகிருஷ்ணன், அதிமுக சார்பில் சையதுகான், அமமுக வேட்பாளர் சுரேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் அனீஸ் பாத்திமா, மக்கள் நீதி மையம் சார்பில், வேதா.வெங்கடேஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 26 பேர் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இவைகளின் பரிசீலனை நேற்று நடந்தது. இதில் முக்கிய வேட்பாளர்களான திமுக, அதிமுக., அமமுக மற்றும் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் வேட்பாளரகள் மனுக்கள் ஏற்கப்பட்டன. இதன்படி மாற்று வேட்பாளர்கள், சரியாக பூர்த்தி செய்யாத படிவங்கள், வாபஸ் என 26 வேட்புமனுவில் 11 மனுக்கள் தள்ளுபடியான நிலையில், 15 பேர் களத்தில் உள்ளனர். 22ம் தேதி இறுதிப்பட்டியல் வெளியாகும்.

Tags : Kambam constituency ,
× RELATED கம்பம் தொகுதியில் ஊர்தோறும்...