திமுக கூட்டணி கட்சியின் ஊழியர் கூட்டம்

காளையார்கோவில், மார்ச் 21:  காளையார்கோவிலில் திமுக கூட்டணி கட்சிகளின் ஊழியர் கூட்டம் இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர் குணசேகரன் தலைமையில் நடந்தது. மாவட்ட இ.கம்யூ. துணைச்செயலாளர் கோபால் வரவேற்றார். மாவட்ட இலக்கிய அணி தலைவர் தென்னவன், காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் கோபால், சிபிஎம் மாவட்ட செயலாளர் வீரபாண்டி, கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாநில இலக்கிய அணி அமைப்பாளர் தென்னவன் பேசுகையில், காய்கறி விலைகள் உயர்ந்து விட்டது. பெட்ரோல் விலை எட்ட முடியாத அளவிற்கு சென்று விட்டது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது என்று கூறினார்.

எம்பி கார்த்திக் சிதம்பரம் கூறுகையில், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பினாமி அரசு, நாட்டு மக்களை காப்பாற்ற தவறி விட்டது. மேலும் வேலை வாய்ப்பு தருகிறோம் என்று கூறிய அரசு பல்வேறு குடும்பங்களில் உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறித்துள்ளது. வேட்பாளர் குணசேகரன் பேசுகையில், குடிநீர் திட்டம், சாலை வசதி, விவசாயிகளுக்கு பயிர்இன்சூரன்ஸ் பெறுவதற்கான முழு முயற்சி, தாலுகா அலுவலகம் உட்பட பல்வேறு திட்டங்களை நான் எளிமையாக உங்களிடம் கொண்டு சேர்த்துள்ளேன் என்று பேசினார்.

Related Stories:

>