×

சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் 20 வேட்பு மனுக்கள் ஏற்பு

சிவகங்கை, மார்ச் 21:  சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட இ.கம்யூனிஸ்ட், அதிமுக, அமமுக, உள்பட 20வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. தமிழகம் முழுவதும் ஏப்.6ல் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. மார்ச் 12 முதல் நேற்று வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் இ.கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குணசேகரன், அதிமுக சார்பில் செந்தில்நாதன், அமமுக சார்பில் அன்பரசன், மநீம கூட்டணியில் சமக சார்பில் நேசம்ஜோசப், நாதக சார்பில் மல்லிகா மற்றும் மாற்று வேட்பாளர்கள் உள்பட 26பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

நேற்று சிவகங்கை ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் பொது பார்வையாளர் முத்துக்கிருஷ்ணன் சங்கரநாராயணன் முன்னிலையில் மனுக்கள் பரிசீலனை நடந்தது. அதிமுக, அமமுக வேட்பாளர்கள் சார்பில் தலா இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் தலா ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  அதிமுக சார்பில் மாற்று வேட்பாளராக ராமசாமி, இ.கம்யூனிஸ்ட் மாற்று வேட்பாளராக கோபால் ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. நாம் தமிழர் சார்பில் இருவர் தலா இரண்டு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் தலா ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 26மனுக்களில் ஆறு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 20பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. மனு வாபஸ் வாங்க நாளை கடைசி நாள் ஆகும். மாற்று வேட்பாளர் உட்பட மேலும் சிலர் மனுவை வாபஸ் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து நாளை மாலை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

Tags : Sivagangai Assembly ,
× RELATED நாடக மேடை திறப்பு