×

சிட்டு குருவி குறித்த விழிப்புணர்வு விழா

மதுரை, மார்ச் 21: மனிதர்களுடைய வாழ்க்கை மாற்றத்தினால், சின்னஞ்சிறு குருவிகளின் வாழ்விடம் அழிக்கப்பட்டு விட்டது. அதனுடைய எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு மாணவ, மாணவிகள் செருப்பு கடையில் அட்டை பெட்டிகளை வாங்கி அதனை சிட்டுக் குருவிகளுக்கு ஏற்றபடி கூடுகளாக மாற்றினர். இவற்றை பால்கனி மற்றும் போர்டிகோவில் வைப்பதற்காக பலருக்கும் இலவசமாக  வழங்கினர். மேலும், இதனுடன் தண்ணீர், உணவு வைக்கவும் வலியுறுத்தப்பட்டது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை விலங்கியல் துறை மாணவர்கள் சார்பில் நடந்த  இதற்கான விழிப்புணர்வு விழாவில், கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், பேராசிரியர்கள் ஜோசப் ததேயுஸ், டாரதி ஷீலா, ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பேசினர்.

Tags : Sparrow Awareness Ceremony ,
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு