15 பேருக்கு நன்னெறி ஆசிரியர் விருது

மதுரை, மார்ச் 21: மதுரை இலக்கிய மன்றம் மற்றும் தமிழ்நாடு ஜல்லிகட்டு பேரவை இணைந்து நன்னெறி ஆசிரியர், பேராசியர்களுக்கு விருது வழங்கும் விழா பரவை மங்கையர்க்கரசி கல்லூரியில் நேற்று நடந்தது. இவ்விழாவிற்கு ஒருங்கிணைப்பாளர் பெனிட்கரன் தலைமை வகித்தார். கல்லூரியின் செயலாளர் அசோக்குமார், இயக்குனர் சக்திபிரனேஷ் முன்னிலை வகித்தனர். 12 ஆசிரியர்கள், 3 பேராசிரியர்களுக்கு நன்னெறி ஆசிரியர் விருதை மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் வழங்கி பாராட்டினார். மதுரை இலக்கிய மன்றத்தின் தலைவர் மாடசாமி, செயலாளர் மகேந்திரபாபு, ஆசிரியைகள் ஜெயமேரி, அகிலாண்டேஷ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>