×

நத்தம் தொகுதியில் ஆண்டிஅம்பலம் வாக்கு சேகரிப்பு

கோபால்பட்டி, மார்ச் 21: நத்தம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏவான ஆண்டிஅம்பலம் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் நேற்று சாணார்பட்டி அருகே நொச்சிஓடைபட்டி கிராமத்தில் உள்ள முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மின்கட்டணத்தை குறைக்க சொல்லி துப்பாக்கிச்சூடு நடத்தி உயிரிழந்த விவசாயியின் நினைவிடத்தில் வணங்கிய பின் ஆண்டிஅம்பம் தனது முதல் தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். வீடு, வீடாக திமுக ஆட்சியின் சாதனைகள் குறித்தும், நத்தம் தொகுதியில் தான் 5 ஆண்டுகாலம் செய்த திட்டங்கள் குறித்த துண்டுபிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரித்தார்.

அப்போது ஆண்டிஅம்பலம் பேசுகையில், ‘முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தற்போது அரசு கல்லூரி அமைப்போம் என வாக்குறுதி அளிப்பதை நத்தம் தொகுதி மக்கள் ஏற்க மாட்டார்கள. அமைச்சராக இருந்த போது செய்ய முடியாத இவர் தற்போது ஓட்டு வாங்குவதற்காக இதுபோல் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். பல்வேறு முறைகேடுகளில் ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் செய்து சம்பாதித்த பணத்தை கொண்டுதான் தற்போது தேர்தலில் நிற்கிறார். நத்தம் தொகுதி தேர்தல் பணத்திற்கும், பாசத்திற்கும் நடக்கும் தேர்தலாகும். இதில் பாசமே வெற்றி பெறும்’ என்றார். பிரசாரத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன், தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ---, ஒன்றிய செயலாளர்கள் மோகன், தர்மராஜ் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

Tags : Ambalam ,Natham ,
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...