×

மடத்துக்குளம் அதிமுக வேட்பாளர் மகேந்திரன் தீவிர பிரசாரம்

உடுமலை, மார்ச் 21: மடத்துக்குளம் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரன் ராவணாபுரம், கரட்டுமடம், கடத்தூர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார். அப்போது அவர்  பேசுகையில், ‘‘அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா சூரிய சக்தி அடுப்பு, அம்மா வாஷிங் மெஷின், பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.7500 உழவு மானியமாக வழங்கப்படும்.

கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படும். அனைவருக்கும் விலையில்லா அரசு கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படும். முதியோர் ஓய்வூதியம் ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும். எனவே, வாக்காளர்கள் இரட்டை இலைக்கு வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்ய வேண்டும்’’ என்றார். பிரசாரத்தின்போது, அதிமுக நிர்வாகிகள் ரங்கசாமி, கட்சிகுமார், காளீஸ்வரன், பாரதிய ஜனதா நிர்வாகிகள் வடுகநாதன், தெய்வகுமார், தமாகா ரத்தினவேலு, அபிராமி ஜெயக்குமார் உட்பட ஏராளமானோர் உடன் சென்றனர்.

Tags : Madathukulam ,AIADMK ,Mahendran ,
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...