வெள்ளக்கோவில் நகர, ஒன்றிய பகுதியில் மு.பெ.சாமிநாதன் தீவிர வாக்கு சேகரிப்பு

காங்கயம், மார்ச் 21:  காங்கயம்  தொகுதி திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், திமுக உயர்நிலை  செயல்திட்டகுழு உறுப்பினரும், திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான  மு.பெ.சாமிநாதன் போட்டியிடுகிறார். இவர் பொதுமக்களை சந்தித்து வாக்கு  சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். நேற்று காங்கயம் தொகுதிக்குட்பட்ட  வெள்ளக்கோவில் நகரம், ஒன்றிய பகுதியான நெசவாளர் காலனி, உப்புபாளையம்  கிழக்கு, உப்புபாளையம் மேற்கு, உப்புப்பாளையம் மேற்கு 2வது வீதி,  வேலகவுண்டன்பாளையம் வீதி, வேலகவுண்டன்பாளையம் வீதி 2, வேலகவுண்டன்பாளையம்  வீதி, குமாரவலசு, ரெட்டிவலசு, திருமங்கலம், அறிவொளிநகர், எம்.ஜி.ஆர் நகர்,  நாச்சியப்பகவுண்டன்வலசு,  சலவையாளர் காலனி, துரைராமசாமி நகர்,  திருவள்ளுவர் நகர், அம்மன்கோவில் வீதி, நடேசகவுண்டர் வீதி, பெரியார் வீதி,  டிசி ரோடு, தாராபுரம் ரோடு, செம்மாண்டம் பாளையம் ரோடு, சிவநாதபுரம்,  காடையூரான்வலசு, பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  தொடர்ந்து வெள்ளகோவில் ஒன்றிய பகுதியில் உள்ள  கிராமத்திலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது மு.பெ.சாமிநாதன் பேசுகையில், ‘‘தமிழகத்தின்  விவசாயம், தொழில், கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்கு முக்கியத்தும் தரும்  வகையில் திமுக தேர்தல் அறிக்கை உள்ளது. அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி  வைக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்’’ என கேட்டுக்கொண்டர். வேட்பாளர் மு.பெ.சாமிநாதன் சென்ற பகுதியில் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள்.

Related Stories:

More
>