×

10 தொகுதிகளிலும் 180 மனுக்கள் தள்ளுபடி

கோவை, மார்ச் 21: கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சேர்த்து 317 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பொதுத் தேர்தல் பார்வையாளர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது.

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயகுமார், தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி, திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனபாதி, பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன், சிங்காநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரன், கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் தாமோதரன் உள்பட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அதன்படி மேட்டுப்பாளையம் தொகுதியில் 36 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 11 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 25 மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டது. சூலூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 25 வேட்புமனுவில் 16 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. கவுண்டம்பாளையம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 27 மனுவில் 12 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட 15 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. கோவை வடக்கு தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 35 மனுவில் 21 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தொண்டாமுத்தூர் தொகுதியில் பெறப்பட்ட 39 மனுக்களில் 10 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 29 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கோவை தெற்கு தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 33 மனுக்களில் 21 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 12 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. சிங்காநல்லூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 38 மனுக்களில் 17 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 21 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. கிணத்துக்கடவு தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 33 மனுவில் 15 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 18 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. பொள்ளாச்சி தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 36 மனுவில் 8 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 28 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

வால்பாறை தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 15 மனுவில் 6 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் 317 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 137 மனுக்கள் ஏற்றுக்கொள்ளபட்டு 180 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வேட்பு மனு திரும்ப பெறுவதற்கு மார்ச் 22ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மார்ச் 22ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியில் வெளியிடப்படும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED ஆர்வமுடன் வாக்களித்த 100 வயது மூதாட்டி