×

விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வேன்: வேட்பாளர் மரகதம் குமரவேல் உறுதி

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் மரகதம் குமரவேல் நேற்று காலை தொடங்கி இரவு வரை மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருடன் பாட்டாளி  மக்கள் கட்சி துணை பொது செயலாளர் பொன். கங்காதரன்,ஒன்றிய அதிமுக செயலாளர் அப்பாதுரை, பாஜக மாவட்ட செயலாளர் அக்ரோ பாலாஜி,மாவட்ட எஸ்சி அணிதலைவர் கண்ணன், மதுராந்தகம் ஒன்றிய தலைவர்  தாமோதரன்,துணைத்தலைவர் மாறன், தொகுதி பொறுப்பாளர் சசிகுமார்,ஒன்றிய மகளிரணி தலைவி திலகவதி, ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஈசூர், பூதூர், கே.கே.புதூர், இருசாம நல்லூர், மேட்டு காலனி,தோட்ட நாவல், கத்திரிச்சேரி, விழுதமங்கலம், முன்னூத்தி குப்பம், முள்ளி, வளர்பிறை, கிணார், ஏறுவாக்கம், கீழவலம்,  அரையப்பாக்கம், மேட்டுப்பாளையம், ஜானகி புரம், தண்டலம், மழுவங்கொல்லை, அத்திமணம், கள்ளபிரன்புரம், வள்ளுவபாக்கம், நெய்குப்பி, மேட்டுக்குடிசை, சூரை, புது பட்டு, சாத்தமை, எல்.என்.புரம், அரசர் கோவில், பாத்தூர், செட்டிமேடு,  புலிபுரக்கோயில், படாளம், பழையனூர், கொளம்பாக்கம், வையாவூர், மாம்பட்டு, மூசிவாக்கம், மலை வையாவூர்,  பில்லாஞ்சி உள்ளிட்ட பல கிராமங்களில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று நேற்று முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார். பொதுமக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அப்போது மரகதம் குமரவேல் மக்களிடம் பேசுகையில், கிராமங்கள் நிரம்பிய இந்த மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே ஈசூர் வள்ளிபுரம் கிராமங்களுக்கிடையே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதேபோன்று இந்த பகுதியில் வேறு எங்கு தடுப்பணைகள் தேவைப்படும் என்பதை கண்டறிந்து பாலாற்றின் குறுக்கே அணை கட்டப்படும். அப்போது மேலும் இப்பகுதி விவசாயிகளின் நீராதாரம் அதிகரித்து அவர்களின் விவசாயத்திற்கு  தேவையான தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வேன். மதுராந்தகம் தொகுதியில் உங்களின் தேவைகள் சார்ந்து எப்போதும், எந்த நேரத்திலும் தாங்கள் என்னை அணுகலாம் என்று கூறினார்.

Tags : Emerald Kumaravel ,
× RELATED பூதூர் ஊராட்சியில் ரூ.11 லட்சத்தில்...