×

இரும்பு தொழிற்சாலையில் 19 பேருக்கு கொரோனா

திருநின்றவூர்: திருநின்றவூர் சி.டி.எச் சாலையில் தனியார் இரும்பு கம்பிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு வெளிமாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலமாக இரும்பு ஷீட் கொண்டு வரப்படுகிறது.  பின்னர்,  இந்த தொழிற்சாலையில் இரும்பு கம்பிகள் தயாரிக்கப்பட்டு, ஆர்டரின் பேரில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு வாகனம் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. இந்த குடோனில் 250க்கும் மேற்பட்ட வட மாநில  தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தனியார் மருத்துவமனை மூலமாக தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

இதன் முடிவு நேற்று முன்தினம்  தெரிவிக்கப்பட்டது. அதில், 19 தொழிலாளர்களுக்கு தொற்று நோய் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, தொழிற்சாலை நிர்வாகம் தொற்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்களையும் விடுமுறை கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார்கள்.  பின்னர், அவர்கள் அனைவரும் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.  இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், நேற்று மதியம் தொழிற்சாலைக்கு திருநின்றவூர் பேரூராட்சியில் இருந்து சுகாதார ஊழியர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தொழிற்சாலை  முழுவதும் கிருமிநாசினி தெளித்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், தொற்று வைரஸ் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

Tags :
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தல்...