×

நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் திருவாலங்காடு திருவுலாங்காடு ஆனது: தமிழ் ஆர்வலர்கள் கடும் வேதனை

திருத்தணி: திருவாலங்காட்டில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் வட்டார கல்வி அலுவலகம், வேளாண்மை அலுவலகம் மற்றும் சிவன் கோயில் உள்ளது. இங்குள்ள மாநில  நெடுஞ்சாலைத்துறை மூலம் திருவாலங்காடு என்பதற்கு பதிலாக திருவுலாங்காடு என்று தவறாக வைத்துள்ளனர். இதை மாநில தமிழ் வளர்ச்சிக் கழக இயக்குனர் விஜயராகவன் கோவிலுக்கு வரும்போது அந்த பெயரை பார்த்துள்ளார். இதையடுத்து உடனடியாக தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகளை வரவழைத்து எழுத்துப்பிழையை சரி செய்துள்ளார். இதுபோல் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முஸ்லிம் நகர், இஸ்லிம் நகர் என்றும் லட்சுமாபுரம்  லட்சுமிபுரம் என்று தவறாக பெயர்பலகை வைத்துள்ளனர்.

இது தமிழ் ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டியது அரசின் கடமை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் பெரும்பாலான ஊரின் பெயர்ப்பலகைகள் பிழைகளுடன் வைக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் பெயர் பலகைகளும் தவறாக அச்சிடப்படுகிறது. டிஜிட்டல் பேனர், பெயர்ப்பலகைகள் தயாரிக்கும் கடைகளில் தமிழ் சரிவர தெரியாதவர்களே பணியாற்றுவதால்தான் இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது.இதனால் வெளியூர்களில் இருந்துவரும் மக்கள் குழப்பம் அடைகின்றனர். இனிவரும் காலங்களில் தமிழ் வளர்ச்சித்துறை மூலமே அவர்களுடைய ஒப்புதல் பெற்று பெயர் பலகை எழுதிவைக்க வேண்டும்” என்றனர்.

Tags : Thiruvalankadu ,
× RELATED உடற்பயிற்சியாளரை வெட்டிய 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது