திருமழிசை ஆரம்ப சுகாதார நிலையத்தை நவீன மருத்துவமனையாக மாற்றுவேன்: திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி உறுதி

திருவள்ளூர்: பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி திருமழிசை பேரூராட்சியில் வீதி, வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது, ஒவ்வொரு  வீட்டின் முன்பும் பெண்கள் கோல மாவில் உதயசூரியன் சின்னத்தை வரைந்தும், திமுக வெற்றி என வரைந்தும், ஆரத்தி எடுத்தும், சூரத்தேங்காய், பூசணிக்காய் உடைத்தும் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது அவர் பேசியதாவது, “திருமழிசை பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நவீன மருத்துவமனையாக மாற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

விரிவடைந்து வரும் நகர் பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை  திட்டத்தை முழுவதுமாக கொண்டுவரவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், மழைநீர் கால்வாய் அமைக்கவும், பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும், புதிய பள்ளி கட்டிடங்களை கட்டி தரவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன்,”  இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரசாரத்தில் திமுக பேரூர் செயலாளர் தி.வே.முனுசாமி, ஒன்றிய செயலாளர்கள் பூவை எம்.ஜெயக்குமார், டி.தேசிங்கு, காங்கிரஸ் சுந்தரம் ரங்கசாமி, மதிமுக பூபதி, வீரசேகர், விசிக புருசோத்தமன், பேரூர் நிர்வாகிகள் ஜெ.மாகதேவன்,  உ.வடிவேல், வக்கீல் வி.எம்.நாகதாஸ், தி.கோ.செல்வம், ப.அருள், மு.குமார், கருணாநிதி, கங்காதரன், எம்.சங்கர், கே.பாஸ்கர், எஸ்.கோபால், எம்.சுரேந்தர், இளங்கோ, டி.கே.வேலு, ஜி.நாகராஜ், ஜான்மேத்யூ, ஜெயகுரு, எம்.நவீன்குமார் உள்பட பலர்  கலந்துகொண்டனர்.

Related Stories:

>