×

திருநின்றவூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்ட பணிகளை கொண்டு வருவேன்: திமுக வேட்பாளர் நாசர் வாக்குறுதி

ஆவடி: ஆவடி தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், திமுக வேட்பாளராக போட்டியிடும் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் ஆவடியில் உள்ள பாதுகாப்பு துறை நிறுவனமான “இன்ஜின் பேக்டரி”  வளாகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு தொழிலாளர்களிடம் ஆதரவு கேட்டார். பின்னர் திருநின்றவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 1,2,14,15,16,17,18 ஆகிய வார்டுகளில் திறந்த ஜீப்பில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளர் ஆவடி நாசர் பொதுமக்களிடம் பேசியதாவது, “திருநின்றவூர் பேரூராட்சியில் பொதுமக்களின் நீண்ட நாள் கனவான பாதாள சாக்கடை, குடிநீர் திட்ட பணிகளை கொண்டு வர பாடுபடுவேன். திருநின்றவூர் பெரிய ஏரியை  தூர்வாரி, ஆழப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்வேன்.

 ஆரம்ப சுகாதார மையத்தை தரம் உயர்த்துவேன். திருநின்றவூரில் இருந்து தி.நகர், கோயம்பேடு, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு புதிய பேருந்து  வழித்தடங்கள் கொண்டு வருவேன். சேதமடைந்து கிடக்கும் அனைத்து சாலைகளையும் தார் சாலையாக மாற்றிட நடவடிக்கை மேற்கொள்வேன். பராமரிப்பின்றி கிடக்கும் பூங்காக்களை சீரமைப்பேன். ராமதாசபுரத்தில் உள்ள சுடுகாட்டை,  எரிவாயு தகன மேடை மாற்றுவேன். 10 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டி கிடக்கும் ஆடு அடிக்கும் தொட்டிக்கு புதிய உபகரணங்களுக்கு ஏற்பாடு செய்துதிறக்க நடவடிக்கை மேற்கொள்வேன். பெரியார் நகர், சுதேசி நகர், முத்தமிழ் நகர், கன்னிகாபுரம்  ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்வேன். அதிக அளவு குடும்ப அட்டைகள் உள்ள கடைகளை பிரித்து புதிய கடைகளை கொண்டு வருவேன். எனவே நீங்கள் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன்,”

இவ்வாறு அவர் கூறினார். தேர்தல் பிரசாரத்தின்போது, திருவள்ளூர் தொகுதி எம்.பி கே.ஜெயக்குமார், திமுக மாநில மாணவரணி இணைச்செயலாளர் பூவை ஜெரால்டு, மாவட்ட துணைச்செயலாளர் ஜெ.ரமேஷ், ஒன்றிய செயலாளர் டி.தேசிங்கு,  பொதுக்குழு உறுப்பினர் ராஜி, திருநின்றவூர் பேரூராட்சி செயலாளர் தி.வை.ரவி, வழக்கறிஞர் மூர்த்தி, மதிமுக மாநில தேர்தல் பணிச்செயலாளர் அரிதாஸ், காங்கிரஸ் மாநில விவசாய பிரிவு தலைவர் எஸ்.பவன்குமார், ஆவடி மாநகர தலைவர்  இ.யுவராஜ், மாவட்ட துணைத்தலைவர் தி.ஜெ.விஸ்வநாதன், பேரூராட்சி செயலாளர் ஜி.குமார், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மு.ஆதவன், எஸ்.சூரியகுமார், மா.பூபாலன், எஸ்.மயில்வாகனம், அறிவழகன், ஸ்டீபன்ராஜ், ஏழுமலை, முகமது  முசாயர், முகமது ஷெரீப், குப்புராஜ், திமுக நிர்வாகிகள் ரவி, நாகராஜ், பாபு, சுரேஷ்குமார், அன்பழகன், சேகர், கமலக்கண்ணன், குமார், வக்கீல் சசிகுமார், வெங்கடேசன், கோபால், ரவிச்சந்திரன், சாய் கணேஷ், தங்கராஜ், பாபு, மூர்த்தி உள்பட  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.


Tags : DMK ,Nasser ,Thiruninravur ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி