கும்மிடிப்பூண்டியில் ராணுவத்தினர் முன்னிலையில்15 ஆண்டு பழமையான வெடிகுண்டுகள் அழிப்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் ராணுவத்தினர் முன்னிலையில் 15 ஆண்டு பழமையான வெடிகுண்டுகள் அழிக்கப்பட்டது.கும்மிடிப்பூண்டி அருகே இலங்கை அதிகள் முகாமை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிப்காட் பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றனர். அப்போது, அதில் ஒரு சிறுவன் கிணற்றின் அடியில் மண் எடுக்க  சென்றபோது, ஒரு இரும்பு பொருளை எடுத்து வந்தான். அதை வெளியே கொண்டு வந்து கற்களால் உடைத்தபோது அந்த இரும்பு பொருள் வெடித்தது. இதில், சிறு காயங்களுடன் மூவரும் உயிர் தப்பினர்.

தகவலறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது அது வெடிகுண்டு என தெரியவந்தது. பின்னர், கிணற்று தண்ணீரை மோட்டார் பம்ப் மூலம் முழுவதும் இறைத்து பார்த்தபோது உள்ளே மூட்டை மூட்டையாக  வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து இந்திய ராணுவத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, புனேயில் இருந்து விரைந்து வந்த ராணுவ அதிகாரிகள் சோதனை செய்து இவை அனைத்தும் வெடிக்கக்கூடியது என  தெரிவித்தனர்.

இதனையடுத்து ராணுவ அதிகாரிகள் மற்றும் போலீசார் சிப்காட்டில் உள்ள இரும்பு உருக்காலைகளை ஆய்வு செய்தபோது அங்குள்ள இரும்பு உருக்காலைகளில் ஏகே 47 துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் ஏராளமாக கைப்பற்றப்பட்டது. இதில் ஒரு சில உருக்காலை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வெடிகுண்டுகள் மற்றும் பொருட்களை அழித்து உருக்குவதற்காக அமெரிக்காவில் இருந்து கப்பல் மூலம் கொண்டு வந்தது தெரியவந்தது. இவற்றை பறிமுதல் செய்த  ராணுவத்தினர் அவற்றை மண்ணில் புதைத்து வைத்தனர்.

இந்த வெடிகுண்டுகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம், இதனால், கும்மிடிப்பூண்டி பகுதிக்கு ஆபத்து உள்ளது என பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, 15 ஆண்டுகளுக்கு பிறகு புனேயில் இருந்து வந்த ராணுவ அதிகாரி அனில்  கபூர், கேப்டன் விக்ரம் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு நேற்று கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் வெடிகுண்டுகள் தரம் பிரித்து மாதர்பாக்கம் காப்புக்காட்டு பகுதியில் வைத்து செயலிக்க செய்யப்பட்டது.

Related Stories:

>