×

பள்ளிப்பட்டு பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது: நகை, பணம் பறிமுதல்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பகுதியில் சமீபகாலமாக பூட்டிய வீடுகளை குறிவைத்து மர்ம நபர்கள் இரவு நேரங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வந்தது.  இதேபோல், பொதட்டூர்பேட்டையில் டாஸ்மாக் மது கடையை உடைத்து மது பாட்டில்கள் அள்ளி சென்றதும், சில தினங்களுக்கு முன்பு வெளிகரம், சாமி நாயுடு கண்டிகை, பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் பொருட்கள்  திருடுபோனது. இந்த சம்பவங்களால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு ஆர்.கே.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்தர் குமார் தலைமையில் போலீசார் நகரி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று நபர்களை மடக்கி விசாரித்ததில் முன்னுக்குப் பின் பதில் கூறினார். இதனால், சந்தேகமடைந்த போலீசார் இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் கத்தி மற்றும் நகை  பொருட்கள் வைத்திருந்தனர்.

உடனடியாக அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்ததில் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த நரிக்குறவர் மதராசி (எ) ராஜா என்பவர் ஊசிமணி வியாபாரம் செய்து வந்ததாகவும், அவருடன் பல்வேறு குற்ற சம்பவங்களில்  ஈடுபட்டு வந்த சென்னை குன்றத்தூர் சேர்ந்த அண்ணாமலை, குடியாத்தம் பாண்டியன் ஆகியோர் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு ஊசிமணி விற்கு செல்லும் ராஜா பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு அவர்களுக்கு கொடுத்த தகவலின்பேரில்  இரவு நேரங்களில் சென்று வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் பொருட்களை திருடிச்சென்று மூவரும் பங்கு போட்டுக்கொள்வது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களும் 5 சவரன் நகை விலை உயர்ந்த கை கடிகாரங்கள், கேமரா மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Pallipattu ,
× RELATED பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பேரூராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு