கோவில்பட்டியில் வீதி, வீதியாக பிரசாரம் மக்கள் பணி செய்ய மீண்டும் வாய்ப்பு தாருங்கள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

கோவில்பட்டி, மார்ச் 20:கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான கடம்பூர் ராஜூ, கோவில்பட்டி காந்திநகர் காளியம்மன் கோயில் தெருவில் நேற்று பிரசாரம் துவக்கினார். நடராஜபுரம் பகுதி, சரமாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். சரமாரியம்மன் கோயில் தெருவில் அவர், வாக்கு சேகரிக்க சென்ற போது பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது ஆரத்தி எடுத்த பெண்ணின் கையில் இருந்த குழந்தையை வாங்கிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, அந்த குழந்தையை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார்.

தொடர்ந்து மாலையில், கோவில்பட்டி பழைய பஸ்நிலையம் அருகில், சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம், புதுக்கிராமம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அதிமுக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கி ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசும்போது, கோவில்பட்டி பகுதிகளில் ரூ.82 கோடி மதிப்பில் சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி உள்ளேன். ரூ.81 லட்சம் மதிப்பில் கோவில்பட்டி நகரில் 27 இடங்களில் மற்றும் தொகுதி முழுவதும் 48 இடங்களில் ரூ.2 கோடி மதிப்பில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளேன்.

கோவில்பட்டியில் சார்பதிவாளர் அலுவலக கட்டிடம், நகராட்சி அலுவலக கட்டிடம் ஆகியவை அமைத்து கொடுத்துள்ளேன். ஹாக்கி மைதானம் அமைத்துள்ளேன். எனவே மக்கள் பணி செய்ய, எனக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள். அதிமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக்க ஏற்பாடு செய்வேன்’ என்றார். வேட்பாளருடன் நகர செயலாளர் விஜயபாண்டியன், அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் சந்திரசேகர், தங்கமாரியம்மாள், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி,

துணைத்தலைவர் பழனிசாமி, முன்னாள் யூனியன் துணைச்சேர்மன் சுப்புராஜ், நகர மாணவரணி செயலாளர் விநாயகாமுருகன் மற்றும் பாபு, அல்லிதுரை, சவுந்தரராஜன், வேலுமணி, ஆபிரகாம்அய்யாத்துரை. பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, நகர செயலாளர் கருப்பசாமி மற்றும் மகாராஜா, மாடசாமி, காளிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>