×

திருச்செந்தூர் தொகுதியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெறுவேன் திமுக வேட்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் பேச்சு


உடன்குடி, மார்ச் 20: திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும்  அனிதாராதாகிருஷ்ணன் தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். உடன்குடி ஒன்றியம் கல்லாமொழியில் காலை 7மணிக்கு திறந்த ஜீப்பில் பிரசாரத்தை துவங்கினார். அவருக்கு ஒன்றிய செயலாளர் பாலசிங் தலைமையில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து குலசேகரன் பட்டினம், மணப்பாடு, சபாபதிபுரம், சிறுநாடார்குடியிருப்பு, பெரியபுரம், மாதவன்குறிச்சி, அமராபுரம், கூடல்நகர், காரங்காடு, தாண்டவன்காடு, ஞானியார்குடியிருப்பு, தீதத்தாபுரம், வேதகோட்டைவிளை, ராமசாமிபுரம், மாடவிளை, கந்தபுரம், நேசபுரம், உதிரமாடன்குடியிருப்பு, செம்புலிங்கபுரம், கந்தசாமிபுரம், பிறைகுடியிருப்பு, கலியன்விளை, சுப்பிரமணியபுரம், மெய்யூர், தாங்கைகைலாசபுரம், பண்டாரபுரம், ராமசந்திராபுரம், வாகைவிளை, வேப்பங்காடு, வீரவநல்லூர், அடைக்கலாபுரம், இலங்கநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு சென்று ஓட்டு சேகரித்தார்.

வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது பேசிய திமுக வேட்பாளர் அனிதாராதாகிருஷ்ணன், ‘கடந்த 20ஆண்டுகளாக தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளேன். நான் ஜாதி, மதம் கடந்து மக்கள் பணி செய்து வருகிறேன். எனது சொந்த பணத்தில் இருந்து சுமார் 450க்கும் மேற்பட்டவர்களுக்கு இருதய ஆபரேசன் செய்வதற்கு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உதவி செய்துள்ளேன். ஏராளமான மாணவ, மாணவிகள் படிப்பதற்கு உதவியுள்ளேன். பல ஆண்டுகளாக தொகுதி மக்களின் வீடுகளில் ஒரு சகோதரனாக இருந்து வருகிறேன். திருச்செந்தூர் தொகுதி மக்களின் இதயங்களில் இருந்து என்னை பிரிக்க முடியாது. பரமன்குறிச்சியில் இருந்து உடன்குடிக்கு நுழையும் ரோடு மிக குறுகிய ரோடாக இருந்தது. இதனால் கனரக வாகனங்கள் வரமுடியாத நிலை இருந்தது. எனது சொந்த செலவில் அந்த ரோட்டை விரிவுபடுத்தி கொடுத்தேன்.

மணப்பாடு மீனவ மக்கள் கடலில் ஏற்பட்ட மணல் திட்டினால் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். எனது சொந்த நிதியில் இருந்து ஒரு வாகனம் வாங்கப்பட்டு தற்போது மணல் திட்டு அகற்றப்பட்டுள்ளது. மேலும் புதிய ரேஷன் கடை, மீன்வலை கூடம் கட்டிடம் கட்டி கொடுத்துள்ளேன். மக்களோடு மக்களாக நின்று பணியாற்றிவரும் எனக்கு உடன்குடி பகுதி மக்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் பெற்றி பெறச் செய்வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஜே.ஜெகன், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் உமரி சங்கர், மாவட்ட அமைப்பாளர்கள் இளைஞரணி ராமஜெயம், நெசவாளர்அணி மகாவிஷ்ணு, மாவட்ட துணைஅமைப்பாளர்கள் வர்த்தக அணி ரவிராஜா, இளங்கோ, மாவட்ட சிறுபான்மை அணி சிராசுதீன், மீனவரணி மெராஜ், இளைஞரணி அஸ்ஸாப் அலி, ஆதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் பாலமுருகன், விவசாயஅணி சக்திவேல்,

மணப்பாடு கயாஸ், மைக்கிள், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பயாஸ், நகர இளைஞர் அணி செயலாளர் அஜய், மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் சிந்தியா, உடன்குடி வட்டார காங்கிரஸ் தலைவர் துரைராஜ் ஜோசப், திருச்செந்தூர் தொகுதி முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் முத்துகுமார், மாவட்ட மமகதலைவர் ஆசாத், விசிக மண்டல பொறுப்பாளர் தமிழியன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாவட்ட செயலாளர் இளஞ்செழியன், விசிக ஒன்றிய செயலாளர் சங்கர், ஒன்றிய மதிமுக செயலாளர் இம்மானுவேல், ஒன்றிய சமத்துவ மக்கள் கழக செயலாளர் பாலாஜி மற்றும் திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி, மார்க்.,கம்யூ, இ.கம்யூ, சமக கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Anitharadhakrishnan ,Thiruchendur constituency ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி