தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது

தூத்துக்குடி, மார்ச்20: தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 2பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி சிஎஸ்ஐ பள்ளி காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (42). இவர் வைகுண்டம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர். இதுபோல், திருச்செந்தூர் இடைச்சிவிளை காமராஜர் நகரை சேர்ந்தவர் வேலாண்டி (48). இவர் திருச்செந்தூர் பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வேலாண்டியை கைது செய்தனர். இவர்கள் 2பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். தொடர்ந்து அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட போலீசார் பாளை மத்திய சிறையில் வழங்கினர்.

Related Stories:

>