×

அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட பக்கிள் ஓடை சீரமைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கீதாஜீவன் உறுதி

தூத்துக்குடி, மார்ச் 20:  அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட தூத்துக்குடி பக்கிள் கால்வாய் சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என திமுக வேட்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கீதா ஜீவன் எம்.எல்.ஏ., மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினருடன் தொகுதி மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். இதன்படி, திமுக வேட்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., நேற்று தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள போத்தி விநாயகர் கோயில் முன்பு இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இந்த பிரசாரத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஏபிசிவீ.சண்முகம் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, வேட்பாளர் கீதாஜீவன், போல்பேட்டை மேற்கு, குறிஞ்சி நகர், போல்பேட்பேட்டை கிழக்கு, கோமதிபாய் காலனி, சங்கரப்பேரி, ஸ்டேட் பாங்க் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, திமுக தலைவர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தான் தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாநகரில் மழைக்காலங்களில் மாநகர் பகுதிகளில் சேரும் மழைநீர் செல்வதற்கு ஏதுவாக பக்கிள் ஓடை சீரமைக்கப்பட்டு புதியதாக கால்வாயின் இருபுறமும் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் சில பல பணிகளை அதிமுக ஆட்சி வந்ததும் கிடப்பில் போட்டுவிட்டது.

தேர்தலுக்கு பிறகு வரும் திமுக ஆட்சியில் மாநகரின் வளர்ச்சிக்கான அனைத்து திட்டங்களும் முழுமையாக நிறைவேற்றித்தரப்படும். மாநகர் பகுதிகளிலுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாத வகையில் புதியதாக மேம்பாலங்கள் அமைத்து தரப்படும். சாலைகள் அனைத்தும் தரம் உயர்த்தப்பட்டு, அகலமாக மாற்றி அமைக்கப்படும், கிடப்பில் போடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றித்தரப்படும் என்றார். பிரசாரத்தின்போது, மாநில திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் கீதாமுருகேசன்,

தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார்ரூபன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, அணி செயலாளர்கள் அன்பழகன், ரமேஷ், அந்தோணி ஸ்டாலின், மாணவரணி துணை அமைப்பாளர் பாலகுருசாமி, மாநகர இளைஞரணி அணி அமைப்பாளர் ஆனந்தகேபிரியேல்ராஜ், மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அருண்சுந்தர், செல்வின், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், நிர்மல்ராஜ், ரவீந்திரன், பகுதி துணை செயலாளர் பாலு, முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், முத்துசெல்வம், மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், சக்திவேல், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளீதரன்,

நிர்வாகிகள் கோபால், சேகர், சில்வியா,  முன்னாள் கவுன்சிலர்கள் சந்திரபோஸ், கந்தசாமி, மாநகர மதிமுக செயலாளர் முருகபூபதி, தொம்மை, சேசுராஜ், சுந்தர்ராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அகமது இக்பால், ஜனநாயக வாலிபர் சங்க  மாவட்ட செயலாளர் முத்து  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ஞானசேகர் மற்றும் கூட்டணி கட்சியினர் உட்பட பலர் உடன் சென்றனர்.

Tags : DMK ,Geethajeevan ,Buckle stream ,AIADMK government ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு