×

திமுக வேட்பாளர் அப்துல்வஹாப்பை ஆதரித்து பாளையில் திமுக தேர்தல் காரியாலயம்


நெல்லை, மார்ச் 20:  பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் அப்துல்வஹாப்பை ஆதரித்து திமுக தேர்தல் காரியாலயத்தை ஞானதிரவியம் எம்.பி. திறந்து வைத்தார். பாளை. அனைத்து மகளிர் காவல்நிலையம் அருகே பாளை. சட்டமன்ற தொகுதி திமுக தேர்தல் காரியாலயம் திறப்பு விழா நடந்தது. அவைத்தலைவர் சுப. சீதாராமன் தலைமை வகித்தார். பாளை தொகுதி திமுக  வேட்பாளரும், மத்திய மாவட்ட பொறுப்பாளருமான அப்துல்வகாப், நெல்லை தொகுதி  வேட்பாளர் ஏஎல்எஸ் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரியாலயத்தை ஞானதிரவியம் எம்பி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் தாழை கே.ஆர். ராஜூ, முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டியன், பகுதி  செயலாளர்கள் பூக்கடை அண்ணாத்துரை, அண்டன் செல்லத்துரை, மேலப்பாளையம் அப்துல்கையூம்,  தச்சநல்லூர் டாக்டர் சங்கர், பொதுக்குழு உறுப்பினர் தர்மர், நெல்லை மாநகர முன்னாள் இளைஞரணி அமைப்பாளர்  எஸ்.வி. சுரேஷ், மாநகர துணைச் செயலாளர்கள் வள்ளியம்மாள், செய்யது மைதீன், மாவட்ட துணைச்  செயலாளர் ஆ.க.மணி, தொமுச மகாவிஷ்ணு, முன்னாள் கவுன்சிலர்கள் கமாலுதீன்,  பாலன் என்ற ராஜா, ரேவதி அசோக், ராஜகுமாரி, மாணவரணி அமைப்பாளர் ரம்ஜான்அலி, காசிமணி,

பொறியாளர் அணி சாய்பாபா, பேரங்காடி ஐயப்பன், மகளிரணி மகேஸ்வரி, செந்தில்வேல், வல்லநாடு முத்து, மன்சூர்அலி, மீனவரணி  ஜூடு, ஜெயின் உசேன், மாவட்ட பிரதிநிதி ரைமண்ட்,  கேடிசி பழனியப்பன்,  வழக்கறிஞர்கள் கந்தசாமி, சரவணன் மற்றும்  கூட்டணி கட்சிகள் சார்பில் காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் ராஜேஷ்முருகன், பொதுச்செயலாளர் சொக்கலிங்ககுமார், அமீர்கான், இளைஞரணி மாவட்ட தலைவர் ஆசாத்  பாதுஷா, வெள்ளபாண்டி, அந்தோணி செல்வராஜ், எம்ஏஎஸ் அப்துல்காதர், ராஜீவ் காந்தி, இந்திய  யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எல்கேஎஸ் மீரான் மைதீன்,

பாட்டப்பத்து முகமது அலி, தமமுக மாவட்ட தலைவர் ரசூல்மைதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் மில்லத் இஸ்மாயில், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அலிப் பிலால்,  மதிமுக மாவட்ட செயலாளர் கேஎம்ஏ நிஜாம், பாளை வடபகுதி செயலாளர் மணப்படை மணி, விவசாய அணி கல்லத்தியான், விடுதலைசிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Palai ,Abdul Wahab ,
× RELATED அப்துல்வஹாப் எம்எல்ஏ உடன் பிரசாரம்...