வடக்கன்குளம் முதன்மை குருவிடம் அப்பாவு ஆசி

நெல்லை, மார்ச் 20: ராதாபுரம் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராக அப்பாவு போட்டியிடுகிறார். அவர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று வடக்கன்குளத்தில் வட்டார முதன்மை குரு பங்குதந்தையர் ஜாண் பிரிட்டோவை சந்தித்து வாழ்த்தும், ஆசியும் பெற்றார். அவருடன் வடக்கன்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜான்கென்னடி, ஆவரைகுளம் பஞ்சாயத்து தலைவர் பாஸ்கர், முன்னாள் கவுன்சிலர் மாணிக்கம், வக்கீல் அருண், கிளை செயலாளர் ஐயப்பன், வில்சன், கணேசன், அசோக், சங்கர், எழில்அரசன் மற்றும் கழக உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

ராதாபுரம்: தெற்கு கள்ளிகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் அப்பாவு வாக்கு சேகரித்தார். தெட்சணமாற நாடார் சங்க கல்லூரிக்கு வருகை தந்த அவரைஅனைவரும் வரவேற்றனர். கடந்த காலங்களில் கல்லூரியின் வளர்ச்சிக்கு பல்வேறு காலகட்டங்களில் அப்பாவு உதவியதை நினைவு கூர்ந்து சால்வை அணிவித்து வரவேற்றனர். கல்லூரி தலைவர் காளிதாஸ்நாடார், செயலாளர் சண்முகவேல் பாண்டியன், பொருளாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகளிடம் வாக்கு சேகரித்தார். அப்போது ஒன்றிய செயலாளர்கள் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ். ஜோசப்பெல்சி உடனிருந்தனர்.

Related Stories: