பாளை அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் செயின் அபேஸ்

நெல்லை, மார்ச் 20: பாளை. அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் செயினை அபேஸ் செய்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். வல்லநாடு அருகே உள்ள ஆறாம்பண்ணையை சேர்ந்தவர் சுடலை மனைவி ராஜம்மாள் (59). நேற்று முன்தினம் நெல்லைக்கு வந்துவிட்டு திருச்செந்தூர் செல்லும் பஸ்சில் ஊருக்கு திரும்பினார். கிருஷ்ணாபுரத்தை கடந்து செல்லும் போது ராஜம்மாள் அருகில் உட்கார்ந்திருந்த 2 பெண்கள், அவர் அணிந்திருந்த 5 பவுன் செயினை நைசாக அபேஸ் செய்தனர்.

உடனே சுதாரித்த ராஜம்மாள் கூச்சலிடவே பஸ்சில் இருந்த மற்ற பயணிகள், சம்பந்தப்பட்ட 2 பெண்களையும் கையும்களவுமாக பிடித்து சிவந்திபட்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், சேலம் மாவட்டம் ஆத்தூர் அசோக்நகரை சேர்ந்த ஜோதி (25), சாந்தி (48) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து ராஜம்மாள் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து ஜோதி, சாந்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: