மணக்காடு, அரியகுளம் பகுதியில் நாங்குநேரி அமமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

கேடிசி நகர், மார்ச் 20: நாங்குநேரி தொகுதி அமமுக வேட்பாளர் பரமசிவ அய்யப்பன் நேற்று பாளை அருகே உள்ள மணக்காடு, அரியகுளம், நடுவக்குறிச்சி, கீழப்பாட்டம், பாளையஞ்செட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மேலும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது பாளையங்கால்வாயில் கடைசி மடை வரை ‘லைனிங்’ அமைத்து தருவதாகவும், இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் மற்றும் சாலை வசதிகள் செய்து கொடுப்பதாகவும் உறுதியளித்தார். மணக்காடு சிஎஸ்ஐ ஆலயத்திற்கு சென்று பாதிரியார் சாமுவேல் ஜெபராஜிடம் ஆசி பெற்றார். வேட்பாளருடன் பாளையங்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்பி ராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பரமசிவன், மணப்படை ஊராட்சி செயலாளர் சண்முகசுந்தரம், சீவலப்பேரி ஊராட்சி செயலாளர் பூசாரி, ஜெ. பேரவை கந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நாங்குநேரியில் அமமுக செயல்வீரர்கள் கூட்டம், வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. வேட்பாளர் பரமசிவ ஐயப்பன் தலைமை வகித்து பேசுகையில், தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது அமமுக வெற்றிச் செய்தி முதலில் கோவில்பட்டியிலும், அடுத்து நாங்குநேரியிலும் வரும். அதிமுகவினரும் நமக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். எனவே அனைவரும் அயராது வெற்றிக்காக பாடுபட வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பனையன்குளத்தில் விளையாட்டு கிராமம் திட்டம் மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். நாங்குநேரி தொழில்நுட்ப பூங்காவில் ஏராளமான தொழிற்சாலைகளை கொண்டு வந்து தொகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுப்பேன். களக்காட்டில் வாழை குளிர்பதன கிடங்கு, ஏர்வாடியில் பெண்கள் கல்லூரி கொண்டு வரவும், வடக்கு விஜயநாராயணம் மற்றும் நாங்குநேரி பெரியகுளங்களை தூர்வாரி சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார் கூட்டத்தில் அமமுக, தேமுதிக, எஸ்டிபிஐ மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>