வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் 532 வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி: கமிஷனர் தொடங்கி வைத்தார்

வேலூர், மார்ச் 20: வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் 532 வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியினை மாநகராட்சி கமிஷனர் சங்கரன் தொடங்கி வைத்தார். வேலூர் மாநகராட்சியில் காட்பாடி, சத்துவாச்சாரி உள்ளிட்ட நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு முகாம்கள் அமைந்து கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில் வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் சங்கரன் தலைமை தாங்கினார். மாநகர நல அலுவலர் சித்ரசேனா, சுகாதார அலுவலர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு முகாமில் காட்பாடி மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த 45 வயதுக்கு மேற்பட்ட வியாபாரிகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டது. மொத்தம் 532 வியாபாரிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Related Stories:

>