சங்ககிரி தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜேஷ் வீதி வீதியாக சென்று பிரசாரம்

சேலம், மார்ச் 20: சங்ககிரி தொகுதி திமுக வேட்பாளர் ராஜேஷ், நேற்று தேர்தல் பிரசாரத்தை துவங்கினார். பழைய இடைப்பாடி ரோட்டில் உள்ள சிவமாரியம்மன் கோவிலில்  சாமி கும்பிட்ட அவர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் 11வது வார்டு நல்லப்பநாயக்கர் தெரு, 4வது வார்டு முதலியார் தெரு உள்பட அனைத்து பகுதிகளிலும் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு கேட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘இந்த தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எம்எல்ஏக்களாக இருந்தவர்கள் எந்த பிரச்னையையும் தீர்த்து வைக்கவில்லை. குறைகளை கூட கேட்காமல் சென்றுவிட்டனர். நான் வெற்றி பெற்றால், மக்களாகிய நீங்கள் தான் எம்எல்ஏ., நீங்கள் என்னை தேடி வரவேண்டியது இல்லை. நானே உங்களை தேடி வந்து, உங்களது பிரச்னைகளை தீர்த்து வைப்பேன். எனது வெற்றி உங்களது வெற்றி.

அனைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன். திமுக தலைவர் தளபதி, குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ₹1000 ரூபாய் வழங்கப்படும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கப்படும் என கூறியுள்ளார். எனவே, நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்,’ என்றார். அவருடன் முன்னாள் எம்எல்ஏ வரதராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் தங்கமுத்து, நகர செயலாளர் சுப்பிரமணி, முன்னாள் நகர செயலாளர் முருகன், மாவட்ட பிரிதிநிதி சண்முகம் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் வாக்குசேகரித்தனர்.

Related Stories:

>