×

திருச்செங்கோடு பெரிய பள்ளிவாசலில் கொமதேக வேட்பாளர் வாக்குசேகரிப்பு

திருச்செங்கோடு, மார்ச் 20: திருச்செங்கோடு தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரான கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நான்கு ரத வீதிகளிலும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்களிடம் கொடுத்து வாக்கு சேகரித்தார். அவருடன் நாமக்கல் சின்ராசு எம்.பி., மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதுரா செந்தில், நகர செயலாளர் தாண்டவன் கார்த்தி, முன்னாள் நகரமன்ற தலைவர் நடேசன், ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல், மாணவரணி செயலாளர் ஜிஜேந்திரன், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், மாதேஸ்வரன், மைக்கா ரமேஷ், ஆறுமுகம், பெருமாள், மகேஸ்வரி, வக்கீல் சுரேஷ்பாபு, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சர்வேயர் செல்வகுமார், கொமக மாவட்ட தலைவர் நதிராஜவேல், நகர தலைவர் நாகராஜ், கம்யூனிஸ்ட் கட்சியினர் உடன் சென்றனர்.

முன்னதாக ஆபத்து காத்த வினாயகர் கோயில், கைலாசநாதர் கோயிலில் ஈஸ்வரன் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பழைய பஸ் நிலையம் பெரிய பள்ளிவாசலுக்கு சென்றவர், தொழுகை முடித்து வந்த முஸ்லிம்களிடம் தேர்தல் அறிக்கையை வழங்கி வாக்கு சேகரித்தார். சிறுபான்மையினர் நலன் காக்க திமுக எவ்வாறு முனைப்புடன் செயலாற்றுகிறது என்பது குறித்து விளக்கினார். முத்தவல்லி முபாரக் மற்றும் நிர்வாகிகள் அவர்களை வரவேற்றனர்.

Tags : Comadeka ,Tiruchengode ,
× RELATED மாணவர்களுக்கு எம்எல்ஏ வாழ்த்து