×

நாமக்கல்லில் திமுக கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட பொறுப்பாளர், எம்பி பங்கேற்பு

நாமக்கல், மார்ச் 20: நாமக்கல்லில் திமுக தலைமையிலான மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் தலைமை வகித்து, வேட்பாளர் ராமலிங்கத்தை அறிமுகம் செய்து வைத்து பேசுகையில், ‘கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் ரேஷன் அட்டைக்கு ₹5 ஆயிரம் கொடுக்கும்படி தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக அரசை வலியுறுத்தினார். ஆனால் ₹1,000 மட்டுமே தரப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மீதமுள்ள ₹4 ஆயிரம் வழங்கப்படும். திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்,’ என்றார்.

தொடர்ந்து வேட்பாளர் ராமலிங்கம்  பேசினார். கூட்டத்தில் எம்பி சின்ராஜ், தேர்தல் பொறுப்பாளர் கைலாசம், மாநில நிர்வாகிகள் மணிமாறன், நக்கீரன், ராணி, மாவட்ட இலக்கிய அணி தலைவர் பழனிசாமி, நகர பொறுப்பாளர்கள் ராணா. ஆனந்த், சிவக்குமார், பூபதி, ஒன்றிய செயலாளர்கள் பழனிவேல், நவலடி, கவுதம், துரைராமசாமி, காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் செழியன், மாவட்ட தலைவர் சித்திக், கொமதேக மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மணிமாறன், மதிமுக சேகர்,ஆதித்தமிழர் பேரவை மணிமாறன், மனிதநேய மக்கள் கட்சி அத்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜெயமணி, இந்திய கம்யூனிஸ்ட் கொளந்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்துக்கு பின், திமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் வேட்பாளர் ராமலிங்கம் சேலம் ரோட்டில் இருந்து நாமக்கல் பூங்கா சாலை வரை ஊர்வலமாக சென்று ஆர்டிஓ அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Tags : DMK ,Party Activists ,Namakkal ,
× RELATED கோவில்பட்டியில் இந்தியா கூட்டணி...