பரமத்திவேலூர் தர்கா, பள்ளிவாசலில் கே.எஸ். மூர்த்தி தீவிர வாக்குசேகரிப்பு

பரமத்திவேலூர், மார்ச் 20: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ போட்டியிடுகிறார். இவர் பரமத்திவேலூர் பகுதியில் ஊராட்சிகள் தோறும் நேரில் சென்று திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். மேலும் பொதுமக்களை வீடு வீடாக தேடிச்சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று ஜூம்மா தொழுகைக்கு பின்னர், பரமத்திவேலூர் சஹன்சா பள்ளிவாசலில் தொழுகை முடித்து வந்த முஸ்லிம்கள், கே.எஸ். மூர்த்தி எம்எல்ஏ ஜமாத்தார்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பள்ளிவாசலில் ஜமாத்தார்கருடன் இணைந்து துவா செய்தார்.

தொகுதியில் உள்ள அனைத்து ஜமாத்தார் சார்பிலும், திமுகவிற்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்ய முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என உறுதியளித்தனர். இந்த நிகழ்ச்சியின் போது மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட பொருளாளர் ஆபீத், மாவட்ட துணைச் செயலாளர் ஜின்னா, நகர செயலாளர் ஷாஜகான், சஹன்சா பள்ளிவாசல் செயலாளர் இக்பால், ஜாபர், முபாரக் உல்லா, நசீமுல்லா, ஜமால் மற்றும் திமுக நகர செயலாளர் மணி மாரப்பன், கண்ணன், நகர துணைச்செயலாளர் முருகன், பிரதாப், மதிமுக நகர செயலாளர் அன்பழகன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: