ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் போலீஸ் பார்வையாளர் ஆய்வு

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் தீவிர பிரசாரத்தில் ஒருபுறம் ஈடுபட்டு வர, தேர்தல் பறக்கும் படையினர் போலீசார் உதவியுடன் வாகன தணிக்கை, சோதனைகள் நடத்தி பரிசு பொருட்கள், ஆவணமின்றி எடுத்துச்செல்லும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழு, தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் பாதுகாப்பு பணி என போலீசார் பல்வேறு நிலைகளில், தங்களது பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் பணிகளை ஆய்வு செய்ய போலீஸ் பார்வையாளர் அமர்த்தப்பட்டுள்ளனர். அதன்படி, நாமக்கல் மாவட்ட போலீஸ் பார்வையாளராக டிஐஜி சைத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று ராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டார். கண்காணிப்பு கேமரா, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையில் பாதுகாப்பு பணி, செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ள இடம் ஆகியற்றையும் பார்வையிட்டார்.  மேலும், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் போலீசாரின் பாதுகாப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

Related Stories:

>