வேப்பனஹள்ளி தொகுதியில் திமுக வேட்பாளர் முருகன் எம்எல்ஏ

வீடு, வீடாக சென்று வாக்குசேகரிப்புகிருஷ்ணகிரி, மார்ச் 20: வேப்பனஹள்ளி தொகுதியில் திமுக வேட்பாளர் முருகன் எம்எல்ஏ நேற்று கள்ளுக்குறிக்கி ஊராட்சி பொஜ்ஜேகவுண்டன்புதூர் கிராமத்தில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

அவருக்கு அப்பகுதி பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்புளித்தனர். அப்போது, தொழுகை முடிந்து திரும்பிய இஸ்லாமிய மக்களிடம் பேசிய அவர், சிறுபான்மையின மக்களின் பாதுகாவலராக திமுக இருக்கிறது. மு.க.ஸ்டாலின் சிறுபான்மையினருக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி, அதை முழுவீச்சில் நிறைவேற்ற காத்திருக்கிறார்.

எனவே, அவர் முதல்வர் நாற்காலியில் அமர அனைவரும் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். அதன்மூலம் உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றிட நான் தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது, மேற்கு மாவட்ட திமுக பொருளாளர் ஜெயராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சின்னசாமி, வேப்பனஹள்ளி ஒன்றிய செயலாளர் ரகுநாத், அணிகளின் துணை அமைப்பாளர்கள் சதாசிவம், சிவக்குமார், சண்முகம் மற்றும் திமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: