உத்ரகாண்ட் ஆளுநருடன் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் சந்திப்பு

ஓசூர், மார்ச் 20:தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ் டேராடூனில் உத்ரகாண்ட் ஆளுநரை சந்தித்து பேசினார். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்களின் தலைவர், உறுப்பினர் மற்றும் செயலாளர்களுக்கு குழந்தைகளை போதை பழக்கத்திலிருந்து தடுப்பது மற்றும் போதைக்கு அடிமையான குழந்தைகளை மீட்டு மறுவாழ்வு அளிப்பது குறித்த தேசிய அளவிலான பயிற்சி முகாம் உத்ரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் கடந்த 16, 17ம் தேதிகளில் நடைபெற்றது.

இதற்காக டேராடூன் சென்ற தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ் உத்ரகாண்ட் ஆளுநர் பேபி ராணி மௌரியாவை டேராடூனில் உள்ள ராஜ்பவனில் சந்தித்து பேசினார். அப்போது, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.

Related Stories:

>