×

வேலியில் சிக்கி மான் சாவு தேன்கனிக்கோட்டை,

மார்ச் 20: தேன்கனிக்கோட்டை அருகே காப்பு காட்டிலிருந்து தவறி வந்த மான் முள்வேலியில் சிக்கி உயிரிழந்தது. தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் மான், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்கினங்கள் ஏராளமாக உள்ளன. கோடை துவங்கியுள்ள நிலையில் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் உணவு, தaண்ணீர் தேடி வன விலங்குகள் ஊருக்குள் படையெடுத்து வருகின்றன. இந்நிலையில், தேன்கனிக்கோட்டை காப்பு காட்டிலிருந்து தண்ணீர் தேடி வெளியேறிய மான் ஒன்று, பெண்ணங்கூர் கிராமத்திற்குள் புகுந்தது.

அப்போது, அங்கிருந்த நாய்கள் விரட்டியதால் ஓட்டம் பிடித்த அந்த மான், தனியார் விவசாய நிலத்தில் உள்ள முள்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் சுகுமார், வனவர் ஈஸ்வரன் ஆகியோர் விரைந்து சென்று மான் உடலை மீட்டு, நொகனூர் காப்பு காட்டிற்கு எடுத்துச் சென்றனர். அங்கு, கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் பிரேதப் பரிசோதனை செய்து அங்கேயே புதைத்தனர்.

Tags : Dhenkanikottai ,
× RELATED யானை தாக்கி விவசாயி பலி