மக்கள் நலப்பணியாளர்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவு

போச்சம்பள்ளி, மார்ச் 20:தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் நலச்சங்க பொறுப்பாளர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 1990ம் ஆண்டு 25 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்கள் தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டனர். 10 ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில் அதிமுக அரசு அனைவரையும் பணி நீக்கம் செய்தது. இதனால், அனைவரும் 20 ஆண்டாக வேலை வாய்ப்பின்றி திண்டாடி வருகிறோம். மீண்டும் மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி வழங்க கோரி நீதிமன்றம் உத்தரவிட்டும், அதிமுக அரசு பணி வழங்காமல் அனைவரையும் நடுத்தெருவில் நிறுத்தியது.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் மீண்டும் மக்கள் நலப்பணியாளர்கள் அனைவருக்கும் பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்து 13,500 மக்கள் நலப்பணியாளர்களின் குடும்பங்களும் திமுக கூட்டணி கட்சிகளை ஆதரிக்க தீர்மானித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>