×

பெற்றோர் திட்டியதால் பிளஸ் 1 மாணவன் தற்கொலை

திருச்சி, மார்ச் 20: திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் முத்துப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் முத்து. கூலி தொழிலாளி. இவரது மகன் ஜனார்த்தனன் (16). பிளஸ் 1 மாணவன். கடந்த 17ம் தேதி திடீரென எலி பேஸ்ட் சாப்பிட்டு வாந்தி எடுத்த ஜனார்த்தனனை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய நிலையில் இரவு மீண்டும் ஜனார்த்தனன் வாந்தி எடுத்தார். அதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றுமுன்தினம் ஜனார்த்தனன் இறந்தார். இதுபற்றி அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில், நண்பர்களுடன் சேர்ந்து எப்போதும் விளையாடிக்கொண்டே இருந்ததால், பெற்றோர் திட்டி உள்ளனர். இதனால் விரக்தியடைந்து ஜனார்த்தனன், எலி பேஸ்ட் சாப்பிட்டது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவி மாயம்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் நடுத்தெருவை சேர்ந்த ராமஜெயம் மகள் அட்சயா (21). திருச்சியில் உள்ள மகளிர் கல்லூரியில் எம்ஏ படித்து வரும் இவர் எடமலைப்பட்டிபுதூரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி, கல்லூரிக்கு சென்று வந்தார். கடந்த 15ம் தேதி கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பல இடங்களில் தேடியும் அட்சயாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தந்தை ராமஜெயம், எடமலைப்பட்டிபுதூர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் நீலகண்டன் வழக்குப்பதிந்து மாயமான அட்சயாவை தேடி வருகிறார். மனநலம் பாதித்த வாலிபர்  தற்கொலை: திருச்சி உறையூரில் மனநலம் பாதித்த வாலிபர் மேன்சன் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி கோர்ட் அருகே சாலையோரம் சிறிய கூடாரம் அமைத்து டைபிஸ்ட் வேலை செய்து வருபவர் ரெங்கநாதன். இவரது மகன் தியாகராஜன் (25). தந்தையும் மகனும் உறையூரில் உள்ள மேன்சனில் அறை எடுத்து கடந்த சில ஆண்டாக தங்கி உள்ளனர். தியாகராஜன் 20வது வயதில் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தியாகராஜனின் தாயும் மனநிலை பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுக்கு முன் இறந்தார். இதையடுத்து உறவினர் வீட்டில் இருந்து வந்த ரெங்கநாதன், மகனுடன் உறையூர் மேன்சனுக்கு இடம் பெயர்ந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வேலை விஷயமாக ரெங்கநாதன், வெளியூர் சென்று விட்டார். நேற்று காலை அறைக்கு வந்து கதவை தட்டிய போது, உள்தாழிடப்பட்ட நிலையில் வெகு நேரமாக தட்டியும் திறக்கவில்லை. ஜன்னல் வழியே பார்த்தபோது, தியாகராஜன் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து ரெங்கநாதன் கதறினார்.

இதுகுறித்த புகாரின் பேரில் உறையூர் எஸ்ஐ சோனியாகாந்தி மற்றும் போலீசார் சம்பவயிடம் சென்று கதவை உடைத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு