சாதாரண ரயிலாக மாற்றி கட்டணம் வசூலிக்க வேண்டும்: பொம்மிடி பயணிகள் சங்கம் வலியுறுத்தல்

தர்மபுரி, மார்ச் 20: சாதாரண பயணிகள் ரயிலாக மாற்றி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பொம்மிடி பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தர்மபுரி மாவட்டம் பொம்மிடி தென்னக ரயில் பயணிகள் சங்கத்தின் செயலாளர் அறிவழகன், தலைவர் காமராஜ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: 06088-06087 என்ற எண் கொண்ட அரக்கோணம் முதல் சேலம் வரை, சேலம் முதல் அரக்கோணம் வரை வாரத்தில் ஐந்து நாட்கள் செல்லும் சிறப்பு பயணிகள், விரைவு ரயில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் வகையில் இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ரயிலில் முன்பதிவு இன்றி பயணிகள் பயணம் செய்யும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்நிலையில் விரைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சாதாரண பயணிகள் ரயில் விடப்படாத நிலையில், அன்றாடம் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் நலன் கருதி, கொரோனா காலத்துக்கு முன்பு இயக்கப்பட்டது போல், சாதாரண பயணிகள் ரயிலாக மாற்றி அமைத்து அதற்கு ஏற்றார் போல், கட்டணம் வசூலிக்க வேண்டும். வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>