லால்குடி ஒன்றிய பகுதியில் திமுக வேட்பாளர் சவுந்தரபாண்டியன் வீதி வீதியாக பிரசாரம்

லால்குடி மார்ச் 20: லால்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சவுந்தரபாண்டியன் லால்குடி கிழக்கு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது லால்குடி சூசையப்பர் ஆலயம் வட்டார பங்குதந்தை பீட்டர் ஆரோக்கியதாசிடம் சென்று ஆசி பெற்றார். மணக்கால் ஊராட்சியில் திரளான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மணக்கால் கிழக்கு, கொப்பாவளி, ஆதிகுடி ,மேட்டாங்காடு, அன்பில் படுகை ,நடராஜபுரம், ஆலங்குடி மகாஜனம், குமாரபாளையம், கே.வி . பேட்டை டி.கல்வி க்குடி ,கொள்ளுமேடு, நத்தம், ஆகிய பகுதிகளில் சென்று வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நத்தம் ஆதிமூல பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். தமிழகத்தில் திமுக ஆட்சி காலத்தில்தான், கொள்ளிடம் ஆற்றில் செங்கரையூர் - பூண்டி இடையே பாலம் அமைக்கப்பட்டது.

இதுபோல பல்வேறு நலத்திட்டம் திமுக ஆட்சியில் தான் செய்யப்பட்டது. தொடர்ந்து நலத்திட்டங்கள் அமைய வேண்டுமென்றால் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார். லால்குடிவடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய சேர்மன் ரவிச்சந்திரன், லால்குடி நகர செயலாளர் துரைமாணிக்கம், ஒன்றிய குழுதுணைத் தலைவர் பெரியஅய்யா முத்துசெழியன், மாவட்ட துணை செயலாளர் துரை கந்தசாமி, மாவட்ட கவுன்சிலர் ஆதிநாயகி ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் அம்பிகாவதி, சக்திவேல், நிவாஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Related Stories:

More