திருச்சி மாநகரில் இன்று குடிநீர் கட்: கமிஷனர் வழங்கினார்

திருச்சி, மார்ச் 20: திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பொன்மலைப்பட்டி தரை மட்ட நீர் தேக்கத்தொட்டியில் இருந்து உந்தப்படும் பிரதான நீருந்து குழாயில் கோரையாறு அருகே நீர் கசிவு ஏற்பட்டு, அதிக நீர் வெளியேறி வருகிறது. இதனால் அதனை சீர்செய்யும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று (20ம் தேதி) எம்.ஜி.ஆர் நகர், எடமலைபட்டி புதூர் மற்றும் பஞ்சப்பூர் உயர் நிலை நீர் தேக்கத் தொட்டில்மூலம் வழங்கப்படும் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது. நாளை (21ம் தேதி) வழக்கம் போல் குடிநீர் விநியோகம் நடைபெறும். எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளார்.

Related Stories:

>