×

திருச்சி மாநகரில் 50 பீட் போலீசாருக்கு ரோந்து செல்ல புதிய பைக்குகள்

திருச்சி, மார்ச் 20: தமிழக காவல்துறையில் பல்வேறு பிரிவின் கீழ் பணியாற்றும் போலீசாருக்கு ரோந்து வாகனம், பேட்ரோல் வாகனம், பைக் உள்ளிட்ட வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி மாநகரில் உள்ள 14 சட்டம், ஒழுங்கு காவல் நிலையம் மற்றும் குற்றப்பிரிவு காவல் நிலையம் என 35க்கும் மேற்பட்ட பிரிவு காவல் நிலையங்கள் உள்ளது. மேலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அப்போதைய கமிஷனரும் தற்போதைய டிஜிபி திரிபாதி உத்தரவின்பேரில் அந்தந்த காவல் நிலையத்திற்குட்ட பகுதியில் பீட் போலீஸ் நிலையம் ஏற்படுத்தப்பட்டது. பிரச்னை மற்றும் சம்பவம் குறித்து உடனே காவல் நிலையம் சென்று புகார் அளிக்க முடியாதவர்களுக்கு புறக்காவல் நிலையம் (பீட்) போலீசாரிடம் தகவல் அளிக்க ஏற்படுத்தப்பட்டது.

தற்போது திருச்சி மாநகரில் 50 பீட் போலீஸ் நிலையம் உள்ளது. இதில் பணியில் உள்ள போலீசாருக்கு ரோந்து பணிக்காக புதிய பைக் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான உத்தரவு வழங்கப்பட்ட நிலையில் 50 புதிய வெள்ளை கலரில் பைக்குகள் வாங்கப்பட்டது. இதையடுத்து பீட் போலீசாருக்கு புதிய பைக்குகளை வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. மாநகர கமிஷனர் லோகநாதன், 50 புதிய பைக்கிற்கான சாவியை அந்தந்த பீட் போலீசாருக்கு நேற்று வழங்கினார். அதை தொடர்ந்து 50 பீட் போலீசாரும் தங்களின் பைக்குகளில் ஆயுதப்படை மைதானத்தில் புறப்பட்டு எல்ஐசி காலனி, மன்னார்புரம், ஜங்ஷன், தலைமை தபால் நிலையம், பாலக்கரை வழியே சத்திரம் சென்று மீண்டும் திரும்பினர்.

Tags : Trichy ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்