×

சனத்குமார நதியில் ஆக்கிரமிப்பை அகற்ற 6 வாரத்தில் நடவடிக்கை: தர்மபுரி கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தர்மபுரி, மார்ச் 20:  தர்மபுரி சனத்குமார நதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் கலெக்டருக்கு உத்தரவிட்டது. கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகி கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம் வழியாக பாய்ந்தோடும் தென் பெண்ணையின் ஆற்றின் முக்கிய துணை நதியாக சனத்குமார நதி விளங்குகிறது. தர்மபுரி அருகே வத்தல்மலை அடிவாரம் மற்றும் பதிகால்பள்ளம் வனப்பகுதியானது சனத்குமார நதியின் நீர்பிடிப்பு பகுதியாக இருந்தது. மலைப்பகுதியின் அடிவாரத்தில் இருந்து கரைபுரண்டு வரும் நீர் பெரியஏரி, அதியமான்கோட்டை ஏரி, மாதேமங்கலம் ஏரி, ஏமகுட்டியூர் வழியாக இலக்கியம்பட்டி ஏரிக்கு வருகிறது. தர்மபுரி நகரம் அன்னசாகரம் வழியாக, கம்பைநல்லூர் சென்று இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றில் 42 கிலோ மீட்டர் பயணம் செய்து கலக்கிறது.

கடந்த 1960ம் ஆண்டுகளில் சனத்குமார நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. இந்த நீரை மக்கள் பயன்படுத்தியுள்ளனர். வழிநெடுகிலும் பல்வேறு ஏரிகளுக்கு இந்த தண்ணீர் கிடைத்தது. அந்த ஏரியை சுற்றியுள்ள கிணறுகள் நிரம்பி, நிலத்தடிநீரும் உயர்ந்திருந்தது. பருவகால மாற்றத்தால் மழை குறைந்தது. நதியின் கால்வாய் முறையாக பொதுப்பணித்துறையினர் பராமரிப்பு செய்யவில்லை. நாளடைவில் ஆக்கிரமிப்பு மற்றும் சாக்கடை கழிவுநீர் ஓடும் பகுதியாக கால்வாய் மாறியது. பல இடங்களில் நதியின் கால்வாய் பகுதி ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கியுள்ளது. குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சனத்குமார நதியின் கால்வாய் தூர் வாரப்படாததால், கால்வாய் சுகாதாரமற்ற நிலையில் தொற்றுநோய் பரவும் இடமாக மாறியுள்ளது.

இந்தநிலையில் சனத்குமார நதியின் கால்வாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். இதற்காக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த ஆண்டு விவசாயிகளின் கோரிக்கை ஏற்று அரசு ₹50 கோடி மதிப்பீட்டில் சனத்குமார நதியின் கால்வாயை புனரைப்பு செய்ய பூமி பூஜை, தர்மபுரி செங்கல்மேட்டில் நடந்தது. நீண்டகால திட்டமாக கருதப்பட்ட இந்த திட்டம் சில நாட்கள் மட்டும் நடந்தது. அதன்பின் கிடப்பில் போட்டனர். பல மாதங்கள் ஆகியும் மீண்டும் பணி நடக்கவில்லை.

இதுகுறித்து முன்னாள் எம்பி தாமரைச்செல்வன் கூறியதாவது: சனத்குமார நதியின் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்னும் 6 வாரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென உயர் நீதிமன்றம் கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்பல இடங்களில் நதியின் கால்வாய் பகுதி ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கியுள்ளது. குறிப்பிகுறிப்பிட்ட காலக்கட்டத்தில் சனத்குமார நதியின் கால்வாய் தூர் வாரப்படாததால், கால்வாய் சுகாதாரமற்ற நிலையில் தொற்றுநோய் பரவும் இடமாக மாறியுள்ளது.

Tags : Sanathkumara river ,Dharmapuri Collector ,
× RELATED சிறப்பு மையத்தில் தபால் வாக்களித்த அலுவலர்கள்