திரளான பக்தர்கள் தரிசனம் முத்துப்பேட்டை பழைய பஸ்நிலையத்தில் மனநோயாளிகள் ஆக்கிரமிப்பில் நிழற்குடை

முத்துப்பேட்டை, மார்ச் 20: முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் பகுதி மார்க்கத்திற்கு செல்லும் பஸ்கள் நிற்கும் பயணிகள் நிழற்குடை ஒன்று உள்ளது. இங்குதான் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், தஞ்சை உட்பட மதுரை, நெல்லை, தூத்துக்குடி போன்ற போன்ற பகுதிக்கு பஸ்களில் செல்லவும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் இந்த பஸ் நிறுத்தம் எந்த நேரமும் கூட்டம் நிறைந்து காணப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த பயணியர் நிழற்குடையில் அப்பகுதியில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட சிலர் மூட்டை முடிச்சுக்களுடன் நீண்ட நாட்களாக தங்கி இருந்து வருவதால் இங்கு வரும் பயணிகளுக்கு மிகவும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதோடு இவர்கள் அங்கு வரும் பயணிகளை திட்டுவதும் சில நேரத்தில் அடிக்க துரத்துவதும் வாடிக்கையாக உள்ளது. இதில் குறிப்பாக பெண் பயணிகள், குழந்தைகள்,

முதியோர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த கட்டிடத்திற்குள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மூட்டை முடிச்சுகள் நீண்ட நாட்களாக கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதன் மூலம் பலவித தொற்று நோய்கள் பரவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே தற்போது கோடை வெயில் துவங்கிவிட்டதால் இனியும் தாமதிக்காமல் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, இங்குள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வேறு இடத்திற்கோ அல்லது காப்பகத்திற்கோ மாற்றி இந்த பயணியர் நிழற்குடையை தூய்மைப்படுத்தி தர வேண்டும் என பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>