பாடைகட்டி மாரியம்மன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்களுக்கு தடை கலெக்டர் தகவல்

திருவாரூர், மார்ச் 20: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் அமைந்துள்ள மகா மாரியம்மன் (பாடை கட்டி மாரியம்மன்) கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி திருவிழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

இந்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாண்டு நாளை (21ம் தேதி) மற்றும் 28ம் தேதி 2 நாட்கள் நடைபெறும் விழாவில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு அனுமதியில்லை எனவும், இதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Related Stories:

>