×

பேராவூரணி தொகுதியில் தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் தெரிவித்தால் நடவடிக்கை பொது பார்வையாளர் தகவல்

பேராவூரணி, மார்ச் 20: பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் முறைகேடுகள் குறித்து தெரியவந்தால் பொதுமக்கள் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியில் புகார் தெரிவிக்கலாம் என்று தேர்தல் பொதுபார்வையாளர் கேட்டுக்கொண்டுள்ளார். பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் ஆணையத்தால் பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அசோக்குமார் சௌகான் பேராவூரணி தாலுக்கா அலுவலகத்தில் நேற்று ஆய்வு செய்தார். தேர்தல் தொடர்பான பயிற்சி, பயிற்சி மையம், கட்டுப்பாட்டு அறை, தபால் வாக்குகள், வேட்புமனு தாக்கல் விபரம், தேர்தல் பணி முன்னேற்பாடுகள், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னேற்பாடு குறித்து கேட்டறிந்தார். பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் பொதுப்பார்வையாளர் கூறியது, தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தலில் முறைகேடுகள், பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பது, தெரிய வந்தால், 9345363227, 04373-235105 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும், ashokias1965@gmail.com < mailto:ashokias1965@gmail.com > என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் புகார் தெரிவித்தால்் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தேர்தல் பொதுப்பார்வையாளர் ஆய்வின்போது, தேர்தல் நடத்தும் அலுவலர் ஐவண்ணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் ஜெயலெட்சுமி, தேர்தல் துணை தாசில்தார் சுந்தரமூர்த்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags :
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு