திமுக வேட்பாளர் அசோக்குமார் பேச்சு திருவையாறு அரசர் கல்லூரியில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை

திருவையாறு, மார்ச் 20: திருவையாறு அரசர் கல்லூரியில் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து கல்லூரியில் நேற்று 1000 பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. திருவையாறு அரசர் கல்லூரியில் வணிகவியல் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் திருவையாறு பேருந்து நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது.

இந்நிலையில் திருவையாறு அரசர் கல்லூரியில் நடுக்காவேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம் தலைமையில் சுகாதார அலுவலர்கள் காலையிலும், மாலையிலும் கல்லூரியில படிக்கும் மாணவ, மாணவிகள், முதல்வர், பேராசிரியர்கள் உள்பட 1000 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.

Related Stories:

More