தஞ்சை கலெக்டர் தகவல் பேராவூரணி தொகுதியில் வேட்பாளர்கள் மனு தாக்கல்

பேராவூரணி, மார்ச் 20: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளர் அசோக்குமார் 4 வேட்பு மனுக்களும், மாற்று வேட்பாளராக அவரது மனைவி பரிமளா2 மனுக்களும், அதிமுக வேட்பாளர் திருஞானசம்பந்தம் 1 மனுவும், மாற்று வேட்பாளராக அவரது தம்பி சீனிவாசன் ஒருமனுவும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திலீபன் 2 மனுக்களும், மாற்று வேட்பாளராக கலையரசன் ஒரு மனுவும், தேமுதிக சார்பில் முத்து சிவகுமார் ஒரு வேட்பு மனுவும், மாற்று வேட்பாளராக செல்லதுரை ஒரு வேட்பு மனுவும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் துரைராஜ் ஒரு மனுவும்,

ஐஜேகே சார்பில் பச்சமுத்து ஒரு வேட்புமனுவும், மாற்று வேட்பாளராக செபஸ்தியார் ஒரு வேட்பு மனுவும், சுயேச்சை வேட்பாளர்கள் நடராஜன், இளங்கோ, உதயகுமார் ஆகியோர் தலா ஒரு வேட்பு மனுவும் தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் 14 வேட்பாளர்கள் 19 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories:

>