×

குமரி மாவட்டத்தில் மக்கள் விரும்பாத திட்டங்கள் வராது

குளச்சல், மார்ச் 20: குமரி மாவட்டத்தில் மக்கள் விரும்பாத திட்டங்கள் வராது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி பா.ஜ. வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் முன்பிருந்து பிரசாரத்தை தொடங்கினார்.  அப்போது பேசிய அவர், குளச்சல் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி அடைய பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற வேண்டும். அதிமுக, பா.ஜ. கூட்டணி வெற்றி பெற்றால் தான் மாவட்டம் நிச்சயம் வளர்ச்சி பெறும். மக்கள் விரும்பாத திட்டங்கள் நிச்சயமாக வராது என நான் உறுதி அளிக்கிறேன். பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை, ஏழை மக்களின் நலன்களை மேம்படுத்தும் வகையில் இருக்கும். குளச்சல் தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிச்சயம் செய்து தருவோம்.  தொகுதி முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு தீர்க்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். பருத்திவிளை, கருமன்கூடல், காட்டுவிளை, சேரமங்கலம், மணவாளக்குறிச்சி, ஆற்றுமுகாம், கடியப்பட்டணம், முட்டம் சர்ச், அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, வெள்ளிச்சந்ைத, கொல்லமாவடி, பேயோடு, கொடுப்பை குழி உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார். பா.ஜ. மாவட்ட தலைவர் தர்மராஜ், அதிமுக  மாநில இளைஞரணி இணை செயலாளர் சிவ செல்வராஜன், மாவட்ட அதிமுக பொருளாளர்  திலக், தமாகா டி.ஆர். செல்வம், குளச்சல் நகர அதிமுக செயலாளர் ஆன்றோஸ்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விஜய் வசந்த்தை சவாலாக நினைக்கவில்லை முன்னதாக நிருபர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்தை, நான் சவாலாக பார்க்க வில்லை. அவர் தான் என்னை சவாலாக நினைக்கிறார். சபரிமலை அய்யப்பன் கோயில், கேரளாவுக்கு மட்டுமல்ல. அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. இது தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று நான் மத்திய அமைச்சராக ஆனாலும் கூட, தமிழ்நாடு மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் மத்திய அமைச்சராக பணியாற்றுவேன். தமிழ்நாடு என் உடல். கேரளா என்பது எனது உடலின் ஒரு பகுதி ஆகும் என்றார்.

Tags : Kumari ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...