×

திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ரகுபதி வேட்புமனு தாக்கல்

திருமயம்.மார்ச்20: திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் ஊர்வலமாக சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ எஸ் ரகுபதி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. இதனிடையே நேற்று திருமயம் காமராஜர் சாலையில் உள்ள திமுக அலுவலகத்திற்கு எம்எல்ஏ ரகுபதி வந்தார். அங்கு திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ரகுபதிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து தொண்டர்களுடன் கட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு திருமயம் கடைவீதி தகர கொட்டகை வழியாக திருமயம் தாலுகா அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தார்.

அப்போது பொதுமக்களிடம் திமுகவுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து திருமயம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணனிடம் திமுக வேட்பாளர் ரகுபதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.இதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் ரகுபதி தனது முதல் கட்ட பிரசாரத்தை திருமயம் ஒன்றியம் அரண்மனைபட்டி, ஆதனூர், கோனாபட்டு, பில்லமங்கலம், காட்டுபாவா பள்ளிவாசல் ஆகிய ஊராட்சிகளில் தொடங்கினார். அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பொதுமக்களிடம் திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள சாராம்சங்களை எடுத்துக் கூறினார்.

மேலும் கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கு எதுவும் செய்யாத அதிமுக அரசு வரும் காலங்களில் செய்யும் என பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். இதில் முன்னாள் திருமயம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராம.சுப்புராம், திமுக ஒன்றிய பொறுப்பாளர் சிதம்பரம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags : Thirumayam Assembly ,DMK ,Raghupathi ,
× RELATED தேர்தல் ஆணையம் பாஜவின் கூட்டணி: அமைச்சர் ரகுபதி காட்டம்