விருதுநகர் மாவட்டத்திற்கு 9 கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்துள்ளேன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

ராஜபாளையம், மார்ச் 20:ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி போட்டியிடுகிறார். ராஜபாளையம் நகர்- ஒன்றிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். பல்வேறு சமுதாய தலைவர்களை அமைச்சர் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். சமுதாய தலைவர்களை சந்தித்து அமைச்சர் பேசுகையில், ‘அனைத்து சமுதாய மக்களிடமும் நான் நண்பனாக பழகக்கூடியவன். உங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து எனக்கு நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

கிராமங்களுக்கு முக்கூடல் கூட்டு குடிநீர் திட்டம், நகர் கூட்டுகுடிநீர் திட்டம், சிவகாசி, சாத்தூர், விருதுநகர் பகுதிகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், அருப்புக்கோட்டை திருச்சுழி பகுதிகளுக்கு வல்லநாடு கூட்டு குடிநீர் திட்டம், சாத்தூர் நகராட்சிக்கு இருக்கன்குடி குடிநீர் திட்டம், திருத்தங்கல், சிவகாசி நகராட்சிக்கு மானூர் கூட்டு குடிநீர் திட்டம் என விருதுநகர் மாவட்டத்திற்கு மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 9 கூட்டுக் குடிநீர் திட்டத்தை நான் கொண்டு வந்துள்ளேன்.

சேத்தூர், செட்டியார்பட்டி பேரூராட்சிக்கு 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சாலைகளை அமைக்க நிதி வாங்கி கொடுத்து உள்ளேன். ராஜபாளையம் தொகுதியில் 14 இடங்களில் அம்மா மினி கிளினிக் திறந்து வைத்துள்ளேன். தொடர்ந்து ஏராளமான வளர்ச்சி திட்ட பணிகளை கொண்டு வருவேன்’ என்றார்.

Related Stories:

>