×

சோழன்குடிக்காடு அரசு பள்ளியில் கொரோனா தடுப்பு பறக்கும் படை ஆய்வு

அரியலூர், மார்ச் 20: கொரோனா தொற்று தற்போது பள்ளி, கல்லூரிகளில் அதிகரித்து வருவதன் காரணமாக சுகாதாரத்துறை சார்பில் பறக்கும் படை அமைத்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் அன்பழகன் தலைமையிலான அலுவலர்கள் வந்து அங்கிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் முக கவசம் அணிந்துள்ளனரா என ஆய்வு செய்தனர். பின்னர் கொரோனா பரவலை தடுக்க அனைவரும் பள்ளி வரும்போதும், பஸ் பயணத்தின் போதும், கடைகள், திருவிழாக்கள், உறவினர்களின் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போதும் முக கவசம் அணிய வேண்டும்.

கைகளை சானிடைசர் கொண்டு நன்கு கழுவ வேண்டும் என செய்ய வேண்டிய நடைமுறை குறித்து விளக்கினர். தொடர்ந்து தலைமையாசியர் வீரமணி பேசுகையில், அன்மையில் தஞ்சாவூர், திருச்சி, அரியலூர் மாவட்டத்தில் சுண்டக்குடி, கோவிந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதை எடுத்துக்கூறி மாணவர்களை மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கூறினர்.

Tags : Corona Anti-Flying Squadron ,Cholankudikkadu Government School ,
× RELATED சோழன்குடிக்காடு அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி