×

மும்முனை மின்சாரம், குடிநீர் கேட்டு மக்கள் மறியல் முயற்சி, ஆர்ப்பாட்டம் அரியலூர் ராம்கோ சிமெண்ட் ஆலையில் 50வது தேசிய பாதுகாப்பு வார விழா: தொழிலக பாதுகாப்பு, சுகாதார கூடுதல் இயக்குநர் பங்கேற்பு

திருச்சி, மார்ச் 20: தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் விதிகளின்படி அரியலூர் மாவட்டம் கோவிந்தபுரம் ராம்கோ சிமெண்ட் ஆலையில் 50வது தேசிய பாதுகாப்பு வார விழா கடந்த 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டது. முன்னதாக ஆலை வளாகத்தில் பாதுகாப்பு கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் நிறைவு விழா ராம்கோ மனமகிழ் மன்றத்தில் நடந்தது. இந்த விழாவில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் சித்தார்த்தன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். இணை இயக்குநர் மாலதி மற்றும் துணை இயக்குநர் சுசிலா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பாதுகாப்பு வாரவிழா விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு பரிசு வழங்கப்பட்டது.

முன்னதாக ஆலையின் மனிதவளத்துறை பொது மேலாளர் ஜான்சன் அந்தோணி லியோ வரவேற்றார். ஆலை பாதுகாப்பு துறை அதிகாரி முருகராஜ் பாதுகாப்பு குறித்த அறிக்கை சமர்ப்பித்தார். உதவி துணை தலைவர் குல்கா–்னி மதுசூதனன், துணை தலைவர் ராமராஜ் சிறப்புரையாற்றினர். இதில் ஊழியர்கள், குடும்பத்தினர், பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மனிதவளத்துறை பால்பாண்டியன் நன்றி கூறினார்.

Tags : 50th National Safety Week Celebration ,Ariyalur Ramco Cement Factory ,Safety ,
× RELATED குழந்தை குடித்த பாலில் பல்லி பிரபல...